தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார். அதே போல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரசிகர்களை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசும் போது, எனக்கு பணம் புகழ் வேண்டாம். நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள் என்று கூறினார். அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Advertisment

karunas

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து கூறியுள்ளார். அதில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர்றேன், வர்றேன்னு புலி வருது கதைய சொல்லிட்டு இருக்காரு. ஆனால் இன்னும் வந்தபாடில்லை. அவரு முதலில் அரசியலுக்கு வரட்டும், அப்பறம் தெரியும் என்னை பத்தி என்றார். மேலும் ரஜினியோட எல்லா ரகசியங்களும் எனக்கு தெரியும். அவை அனைத்தையும் ஒவ்வொண்ணா அம்பலப்படுத்துவேன், இது உறுதி என்று பேசியுள்ளார்.