ADVERTISEMENT

எனக்கு அரசியல் தெரியாது... பெரியார் படம் வெளிவர காரணமே ரஜினி தான்... நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி ட்வீட்! 

11:08 AM Jan 24, 2020 | Anonymous (not verified)

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.

ADVERTISEMENT



இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும். ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்குப் பதில் திருப்பி திட்டாத பண்பாளர்.

ADVERTISEMENT


எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாகப் பேசக்கூடியவர் அல்ல. ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படிப் பேசக் கூடியவர் என்றால் 2006 -ம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களைத் தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது, எதிர்பாராத பெரும் தொகையைக் கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் தான் ரஜினி சார். எனவே அவரை யாரும் தவறாகப் புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT