ADVERTISEMENT

"விஷாலை யோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை" என்று கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்!

10:22 AM Dec 21, 2019 | Anonymous (not verified)

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார். இதற்கு எஸ்.வி.சேகர் தமிழகத்தில் ஒரு நேர்மையான தேசீய சிந்தனை உள்ள தலைவர். ஆம்பிளை என்று குறிப்பிட்டு இருந்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் நடிகர் விஷால் நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், யோக்கியன் வரான் எல்லாரும் சொம்பை எடுத்து உள்ள வையுங்க””. முதல்ல நலிந்த தயாரிப்பாளர்கள் உசிரைக்கொடுத்து சேத்துவைச்ச ₹8.5 கோடி ரூபாயை திருப்பி குடுத்திட்டு ஊருக்கு நாட்டாமை செய்யலாம் தம்பி. சாபம் வாங்காதீங்க என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT