Advertisment

திமுக குடும்பத்திற்குப் பிழைப்பு கொடுக்கிறார்... திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்... கோபத்தில் திமுகவினர்! 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700- லிருந்து 23,077 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 681- லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பாஜகவினர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மோடி ஜி அவர்களின் சிறந்த நடவடிக்கைகள் காரணமாகவே இன்று இந்தியாவில் கரோனா 3-ஆம் நிலைக்குச் செல்லவில்லை. மேலும் பல வளர்ந்த நாடுகளில் பாராசிட்டமால் போன்ற அடிப்படை மருந்துகூட கிடைக்காத சூழ்நிலையில் இந்தியா உலகிற்கே உதவியுள்ளது என்றும் கூறிவருகின்றனர்.

Advertisment

Advertisment

bjp

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி தயாநிதி மாறன், மாநில அரசும் மத்திய அரசும் மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இரவு 11.06- க்கு பல வீடுகளில் அலறல் சத்தம். எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்திற்குப் பிழைப்பு கொடுக்கிறார். அதுதான்MGR the Great என்றும், கற்பூரவாசனை தமிழகத்தில் அறிய முடியவில்லையாமே. வாழ்த்துகள் மோடி அவர்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கு திமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

dhayanithi maran politics S.V.sekar Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe