Advertisment

"செத்தவங்களை நடுரோட்ல போட்டுட்டு போங்க"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

திமுக, திகவின் பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களை கண்டித்து சென்னை நங்கநல்லூரில் பிராமணர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன், உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க நிறுவன தலைவர் கே.சிவநாராயணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

bjp

இதில் கலந்து கொண்ட நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் பேசும் போது, "பிராமணர்களை தொடர்ந்து பழித்து பேசி வரும் திமுக மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களை கண்டிக்கிறோம். இதோ இங்கே இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும், ஒன்னே ஒன்னு ஞாபகம் வெச்சுக்குங்க... ஆர்.எஸ்.பாரதி வீட்டிலேயோ, அல்லது பிராமணர்களை எதிர்த்து பேசுவர்கள் வீட்டிலேயோ நல்லது கெட்டது நடந்தால் கலந்துகொள்ள மாட்டோம், எந்த பிராமணனும் பெண் எடுக்க மாட்டோம்ன்னு சொல்லுங்க" என்று பேசினார்.

bjp

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், "அவங்க வீட்டில யாராவது செத்துட்டா மட்டும் நல்லா மந்திரம் சொல்லுன்னு சொல்ற? ஏன்? உனக்குதான் நம்பிக்கை கிடையாதே.. இழுத்து ரோட்டுல போட்டுட வேண்டியதுதானே? கார்ப்பரேஷன் தூக்கிட்டு போகட்டும்.. அப்போ உனக்கு மட்டும் நம்பிக்கை இருக்கு.. அடுத்தவன் நம்பிக்கையை குலைக்கிறே? இது எவ்வளவு அயோக்கியத்தனமானது? மறந்துடாதீங்க" என்றுபேசினார்.

மேலும் "ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போனால், கும்பத்தை தூக்கிட்டு ஓடாதீங்க" என்று பேசியவர், "ஒரு அதிகாரத்தில் இருக்கிறவங்களுக்கு செய்யாதீங்க, அது கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடிய முடவன் வந்தால், அவனுக்குக்கூட போய் பண்ணுங்க. இன்னைக்கும் இந்து கோயில் மட்டும் அரசாங்கம் கையில் இருக்கு.இவங்களால சர்ச் மேல கை வைக்க முடியல, மசூதி மேல கை வைக்க முடியல, அடுத்த முயற்சியாக கோயில்களை அவரவரே, அந்தந்த மதத்தினரே நடத்த வேண்டும். அதையும் கொண்டு வரணும், நல்லது நடக்கும், நல்லது நடக்கணும்னு நினைக்கிறவங்களை ஆதரிக்கணும்” என்றும் பேசினார். அதன் பின்பு, ”எனக்கும் வயது 70 தான், ரஜினிக்கும் 70தான், ரஜினியை விட 14 நாள் சின்னவன்.ஆனால் ஒன்று, தமிழ்நாட்டை பொறுத்தவரை, நல்லது நினைக்கிறவங்களுக்கு நம்ம ஆதரவை தருவோம். மோடியை திட்றாங்களே, அவங்களுக்கு நான் சொல்றேன், 2024-லயும் மோடிதான் இந்தியாவின் பிரதமர். அதுக்கு அப்புறம்? நீங்க இருக்க மாட்டீங்க,அவ்வளவுதான். ஆனால் அவர் இருப்பார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ”நான் போகாத நாடு இல்லை. ஈஸ்ட் ஆர் வெஸ்ட் இண்டியா இஸ் பெஸ்ட். இந்தியாவை போன்ற சிறந்த நாடு இல்லை. அதை சில தறுதலைகள் தப்பா பயன்படுத்திக்க பார்த்தால், அதை நாம் விடக்கூடாது. நமக்கு பிடிக்காத டிவிக்களை புறக்கணிப்போம், பத்திரிகைகளை புறக்கணிப்போம். நாம சின்ன வயசுல ஸ்கூல்ல எல்லாருடைய டிபன் பாக்ஸ்களில் கையை விட்டு சாப்பிடலையா? இப்போ எங்க இருந்து வந்தது இந்த ஜாதி வெறி? நமக்கு வெறி இல்லையே? ஏன் மத்தவங்களுக்கு மட்டும் நம்ம மேல வருது? அப்படி வந்தால், வெறிபிடித்த நாய்களை கார்ப்பரேஷன்களுக்கு போன் பண்ணி புடிச்சிட்டு போக சொல்லணும். கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணுங்க என்று பேசினார். ஒன்னு மறந்துடாதீங்க, எந்த எலெக்‌ஷனா இருந்தாலும் சரி, வார்டு எலக்‌ஷனா இருந்தால் கூட, திமுகவோ, திராவிடர் கழகமோ, கடவுள் எதிர்ப்பாளர்களோ யாரோ, அவங்களுக்கு ஓட்டு போடாதீங்க. இந்த சத்தியத்தை மட்டும் மறந்துடாதீங்க” என்று பேசினார்.

Meeting politics S.V.sekar Speech
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe