Advertisment

‘தல போல வருமா’... -அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய திமுக எம்எல்ஏ 

actor ajith kumar - trb rajaa

Advertisment

நடிகர் அஜித்குமாரை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்எல்ஏ, அனைத்து பிரபலங்களும் அவரை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.ராஜா. இவர் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். திமுகவைச் சேர்ந்த இவர், நடிகர் அஜித்குமார் ரேசிங் விளையாட்டு மீது வைத்திருக்கும் ஆர்வம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் பேசிய காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது எனவும், அவரை போன்று மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

ajith

மேலும், அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும், ‘தல போல வருமா’, ‘தல அஜித்’ என்ற வாசகங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக அதிமுக, அஜீத் மீது ஒரு பார்வை வைத்திருக்கிறது. நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லுபவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். திமுக எம்எல்ஏவின் இந்த பாராட்டு, சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அஜித் ரசிகர்களை கவருவதற்கான யுக்தியாகக் கூட இருக்கலாம். அஜித் இன்று நேற்று அல்ல, ஆரம்பம் முதலே பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் இவற்றில் ஆர்வம் உள்ளவர். திடீரென்று தற்போது பாராட்ட காரணம், அவரது ரசிகர்களை கவருவதற்காகவே என்று சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

MLA ACTOR AJITHKUMAR trb rajaa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe