Abandoned Election Commission; OPS' conference

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகிஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும்தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி ஓ.பி.எஸ். அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், “வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு நடத்தப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், கட்சி துவங்கி 51வது வருடம் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக அந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம். அதன் பிறகு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

Abandoned Election Commission; OPS' conference

அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் திருச்சி மாநாட்டிற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அண்மையில் திருச்சி மாநாடு குறித்தஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், “முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா உள்ளிட்ட மூன்றையும் சேர்த்து திருச்சி நகரில் வருகிற 24 ஆம் தேதி மிகப்பிரமாண்டமான முறையில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு கட்சியில் இருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த முன்னோடிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். அவர்களும் கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும் சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்றவர்களை முறைப்படி அழைப்போம். இதுகுறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவரும். விழாவில் அனைவரும் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

Abandoned Election Commission; OPS' conference

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகதேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்றுஅங்கீகரித்தது. இதன் மூலம்இரட்டை இலைசின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியாகியது. இதனால் அதிமுகவின்கொடிகள், சின்னங்களைஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின்முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துவருகின்றனர்.

mm

Advertisment

இந்நிலையில், திருச்சியில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடை, வண்ண விளக்குகள், சேர்கள் போன்றவை அமைக்கப்படும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு ஏற்பாடுகளை ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். ''நாங்கள் மூன்று லட்சம் பேர் வருவார்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்பொழுது சொல்வதை எல்லாம் பார்த்தால் நான்கு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 2010 ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜெயலலிதா இங்கு மாநாடு போட்டார். அதுதான் திருப்புமுனை மாநாடாக இருந்தது. அதுபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படும் எனத் தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. அதனால் இதை யாரும் தடை போட முடியாது'' என மாநாடு ஏற்பாடு நிகழ்வுகளைப் பார்வையிட வந்த வைத்திலிங்கம்தெரிவித்துள்ளார்.