Advertisment

தேசியக் கட்சியாகும் ஆத் ஆத்மி; 12.9% வாக்குகள் பெற்று சாதனை

Aad Aadmi is the national party; Record 12.9% votes

குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பாஜகவின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது.இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாற அக்கட்சிக்கு இன்னும் ஒரு மாநிலத்தில் வாக்கு வங்கி உயர வேண்டியது இருந்தது. அதை இன்று ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

Advertisment

ஒரு கட்சி அதிகாரப்பூர்வமாகத்தேசியக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற 4 மாநிலங்களில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளைக் கைப்பற்றி 6% வாக்குகளோடு இருந்தால் அக்கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறும். தற்போது குஜராத்தில் ஆம் ஆத்மி 35 இடங்களில் இரண்டாவதுஇடத்தை பிடித்துள்ளது. 5 இடங்களில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 12.9% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி தேசியக் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் டெல்லி, பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி மார்ச் மாதம் கோவாவில் நடந்த தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Gujarat
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe