Skip to main content

‘9 சால் 9 சவால்’; பாஜகவிற்கு காங்கிரஸ் 9 கேள்விகள்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

'9 Sall 9 sawaal'; Congress has 9 questions for BJP

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை (9 சால் 9 சாவால் - 9 ஆண்டுகள் 9 கேள்விகள்) எழுப்பியுள்ளது. 

 

நாட்டில் பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஏன்? பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரராவதும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவது ஏன்? என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து செல்கையில் அரசு நிறுவனங்களை தன் நண்பர்களுக்கு பிரதமர் மோடி விற்பது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

 

பாஜக அரசு  வாக்குறுதி அளித்தபடி இந்திய விவசாயிகளின் வருமானம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகாதது ஏன்? என்றும் காங்கிரஸ் கேட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை பாஜக அளிக்காதது ஏன்? மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய சேமிப்பை எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி., போன்றவற்றில் மத்திய அரசு முதலீடு செய்தது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காதது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

 

மேலும் சீனாவுக்கு மோடி நற்சான்று அளித்த பிறகும் இந்திய மண்ணை அந்நாடு தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது ஏன்? 18 முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இந்திய பகுதியை சீனா திருப்பி ஒப்படைக்க மறுப்பது ஏன்? தேர்தல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே பாஜக வெறுப்பு அரசியலை கடைபிடிப்பது ஏன்? திட்டமிட்டமுறையில் சமூக நீதியின் அடிப்படைகளை பாஜக ஆளும் மாநில அரசுகள் அழிப்பது ஏன்? பெண்கள், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான கொடுமை நடக்கும் போது சாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அலட்சியப்படுத்துவது ஏன்?  என்றும் காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

அரசியல் சட்ட விழுமியங்களையும் ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு பலவீனப்படுத்துவது ஏன்? எதிர்க்கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை பாஜக கடைபிடிப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பணபலத்தை பயன்படுத்தி சீர்குலைப்பது ஏன்? கொரோனாவால் 40 லட்சம் மக்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களது குடும்பத்துக்கு மோடி அரசு இழப்பீடு தர மறுப்பது ஏன்?  என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.