Skip to main content

75 கிலோ கேக்; பிரியாணி; மருத்துவ முகாம்; அதகளப்பட்ட அதிமுக அலுவலகம்

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும் இணையத்தில் பதிவிட்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். 

 

தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறப்பட்டுள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக கட்சியின் அலுவலகத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் என்பதை குறிக்கும் வகையில் 75 கிலோ அளவிலான கேக் வெட்டப்பட்டது. முன்னாள் அமைச்சர்களுக்கும், தொண்டர்களுக்கும் கேக் மற்றும் உணவு  பரிமாறப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்