Skip to main content

முன்னாள் முதல்வரின் கட்சிப் பொதுக்கூட்டத்தில் 7 பேர் பலி; ஆந்திராவில் பரபரப்பு

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

7 people passed away in former chief minister's party rally; Confusion in Andhra Pradesh

 

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கந்துகுருவில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி சிலர் கால்வாயில் விழுந்து படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

இந்த சம்பவத்தில் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

 

மேலும் இது குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் கட்சியினர் இறந்தது கட்சிக்கு பெரும் இழப்பு. அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு கட்சி அனைத்து வழிகளிலும் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

தடம்புரண்ட ரயில்; அலறிய பயணிகள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
NN

ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.