6,000 crore spent on advertising alone; Strong opposition to central government action

மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 6,491 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisment

மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றகடந்த 8 ஆண்டுகளில் அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இதுவரை செய்துள்ள செலவுகள் தொடர்பாக நாகை எம்.பி. செல்வராஜ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்தியத்தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரங்களுக்குச் செலவு செய்துள்ள தொகை 6,491 கோடியே 56 லட்சம் எனக் கூறினார்.

Advertisment

அதன்படி அச்சு ஊடகங்களில் 3,230 கோடியே 77 லட்சமும், மின்னணு ஊடகங்களில் 3,260 கோடியே 79 லட்சமும் செலவு செய்துள்ளதாகவும்,ஆகமொத்தம்6,491.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசியத்தேவைகளுக்காக உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசு விளம்பரங்களுக்கு 6,491 கோடி செலவு செய்தது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சிகள் கண்டனம் எழுப்பியுள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்திற்கானஊதியத்தை ஒதுக்கீடு செய்யாமல் வைத்திருக்கும் மத்திய அரசு விளம்பரச் செலவுகளை மட்டும் நிறுத்தவில்லை எனச் சாடியுள்ளனர்.

Advertisment