Published on 02/02/2022 | Edited on 02/02/2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளுக்குச் சென்னை மாநகராட்சியில் 18-திருவெற்றியூர், 45-பெரம்பூர், 72-திருவிக நகர், 107-அண்ணா நகர், 135-அசோக்நகர், 190-பள்ளிக்கரணை ஆகிய ஆறு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.