59-ஆவது பிறந்தநாள்: ஜெ.குருவின் திருவுருவச் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குருவின் 59-ஆவது பிறந்தநாளையொட்டி திண்டிவனம் மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இன்று காலை மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், மாநில நிர்வாகிகள் ந.ம. கருணாநிதி, சிவக்குமார், கசாலி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

birthday J.Guru Kaduvetti pmk Ramadoss Tindivanam
இதையும் படியுங்கள்
Subscribe