5,500 people prosecuted; EPS announced the struggle

தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்னமலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த பேரணியில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதனையொட்டி சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரசு பேருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

5,500 people prosecuted; EPS announced the struggle

Advertisment

இந்நிலையில் பேரணியில் ஈடுபட்ட 5,500 அதிமுகவினர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, பாலகங்கா உட்பட 5500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்பட்ட இறப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து வரும் மே 29ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.