Advertisment

“தமிழகத்தில் 20 நாட்களில் 50 அமைச்சர்கள்” - அண்ணாமலை

50 ministers in 20 days in Tamil Nadu - Annamalai

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

Advertisment

மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர் தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார். மத்திய அரசு தரமான அரிசியை கொடுத்தாலும் தமிழக அரசு தரமற்ற அரிசியையே மக்களுக்கு வழங்குகிறது என்றும் கூறினார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்கிறதா என்று பிரதமர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 76 அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

நேற்று இரவே 19 அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். பியூஷ் கோயல் வந்திருக்கிறார். இன்னும் 50 அமைச்சர்கள் அடுத்த 20 நாட்களில் தமிழகத்திற்கு வர இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களுக்கும் செல்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe