aiadmk

Advertisment

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டிதலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து வணங்கினார்கள். பின்னர் ஜெயலலிதாவின் சிலையின் காலை தொட்டு கும்பிட்டனர். அதன் பிறகு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள். ரத்த தானம் செய்வதற்காக ரத்தத்தின் ரத்தமே என்ற செயலியும் தொடங்கி வைக்கப்பட்டது. நலிந்த கட்சி தொண்டர்களுக்கு நிதியும் வழங்கினார்கள்.