எங்களை ஆதரிக்க 40 திமுக எம்எல்ஏக்கள் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Advertisment

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட மேல அரசரடி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஸ்டாலின் புறவாசல் வழியாகத்தான் வரநினைக்கிறார். நாங்கள் நினைத்தால், எடப்பாடியார் நினைத்தால் 40 திமுக எம்எல்ஏக்கள் எங்களிடத்தில் வர தயாராக இருக்கிறார்கள். நாங்க சொல்லவே வேண்டாம். பணம் கொடுக்க வேண்டாம், காசு கொடுக்க வேண்டாம், எடப்பாடி பழனிசாமி சொன்னால் போதும் வர தயாராக இருக்கிறார்கள்.

K. T. Rajenthra Bhalaji

கலைஞரின் மறைவுக்கு பிறகு திமுக மனதளவில் பிளவுப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையை ஏற்காத ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமியை தலைமையை ஏற்று அதிமுகவுக்கு வரலாம். ஆகவே எங்கள் 4 எம்எல்ஏக்களை பற்றி பேசினால், அங்கு உள்ள 40 எம்எல்ஏக்களைப் பற்றி நினைக்க வேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

எங்கள் மீது கல்லெறிந்தால் அவர் மீது பல கற்கள் விழ தயாராக இருக்கிறது. எனவே அவர் நியாயமான அரசியல் பண்ணினால் நாங்களும் நியாயமாக போய்க்கொண்டிருப்போம். சட்டமன்ற பொதுத்தேர்தல் வரட்டும். பார்த்துக்கொள்வோம். யாருக்கு வாக்கு என்பதை பார்த்துக்கொள்வோம். எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா என்று பார்ப்போம். இவ்வாறு கூறினார்.