Advertisment

40 லட்சியம், 37 நிச்சயம்: தினகரன் பேச்சு

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

Advertisment

அப்போது, இன்றைக்கு மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இந்த துரோகிகளால் 18 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. பழனிசாமி ஆட்சி தானாக முடிவுக்கு வரும்.

'மோடி இவர்களுக்கு டாடி'யாம். சொல்வதற்கே வெட்கமாக இல்லையா? சுயேட்சைகள் சேர்ந்துதான் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். 40 லட்சியம், 37 நிச்சயம்.

திமுக - பழனிசாமி மணி மட்டுமல்ல, பலபேர் நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள். மக்கள் நம்மோடு இருப்பதால் வீழ்த்த முடியாது. நம்மோடு இருப்பவர்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள். கட்சி நிர்வாகிகளை தங்கமணி மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் மக்களை மிரட்ட முடியுமா? மக்களை விலைக்கு வாங்கலாமா என்று பார்ப்பார்கள். மக்களுக்கு இந்த துரோகிகளை பற்றி தெரியும். இந்த முறை தப்பிக்கவே முடியாது. மோடி சொல்கிறார் அப்பழுக்கற்றவர். மிஸ்டர் கிளீன் என்பவர் ஏன் இந்த சாக்கடைகளோடு கூட்டணி சேர்ந்தார். இவ்வாறு பேசினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe