Advertisment

மேலும் 4 பெண்கள்; வெளிவந்து கொண்டே இருக்கும் பாதிரியாரின் மர்மங்கள்

4 more women; Mysteries of the priest that keep unfolding

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சேர்ந்தவர்பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ. இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் தவறாகப் பேசி நெருங்கிப் பழகியதாகக் கூறி பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கான பெண்களை இதுபோல திட்டம்போட்டு ஏமாற்றியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

முதலில் பெண்களிடம் நல்லவர் போல பழகி அறிமுகமாகிக் கொள்ளும் பாதிரியார், நாளடைவில் தனது உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார். மெசேஜில் வசியம் செய்யும் வகையில் பேசி அவர்களை நம்ப வைத்து தன் வலையில் எளிதில் வீழ்த்திவிடும் பாதிரியார்., அவர்களுடன் தனியாக இருப்பதை பத்திரமாக வீடியோவாகவும் ஃபோட்டோவாகவும் எடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த வகை வீடியோக்கள் வெளியானதும் பாதிரியார் தலைமறைவானார். இதையடுத்து, அவரை தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ போலீசில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது குற்றச்செயல்கள் சங்கிலி தொடா் போல் நீண்டுகொண்டே போவது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சைபா் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, "உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார்., பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" எனக் கூறியுள்ளார். போலீசாரின் 9 மணி நேர தீவிர விசாரணையில் இதை மட்டும் தான் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து நம்மிடம் பேசிய மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், "பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தவுடன் அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து கோட்டயத்தில் இருக்கும் மலங்கரை கத்தோலிக்க தலைமை சபைக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம் பாதிரியார்கள் சென்று இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெனிட்டிக் ஆன்டோவுடன் சேர்ந்து திருத்தொண்டர் பட்டம் பெற்று பல்வேறு சபையில் பணியில் இருப்பவர்கள். இந்த விசயத்தில் இவா்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவா்களாக முன்வந்து நேரில் விளக்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எனக்கு தெரிந்தளவில் இளம் வயதிலே பாலியல் புகாரில் சிக்கிய முதல் பாதிரியார் இவா்தான். இவரால் ஒட்டு மொத்த மலங்கரை கத்தோலிக்க சபைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பெனிட்டிக் ஆன்டோவை தற்காலிக நீக்கம் போதாது திருத்தொண்டர் பட்டத்தை திரும்ப பெற்று நிரந்தரமாக நீக்க வேண்டும்" என்றார் மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார்.

இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு இருக்கும் பாதிரியாருடைய 3 செல்போன்களில், ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பில் 30 பாதிரியார்களும் 13 பெண்களின் பெயர்களும் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இந்த பெண்கள் யார் யார் என்ற விசாரணையும் தீவிரமாகியிருக்கிறது. அந்த க்ரூப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லையாம்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவா் ஒருவர் பாதிரியார் பணிபுரிந்த சபைகளுக்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த பெண் மருத்துவர் இன்னொரு கிறிஸ்தவ பிரிவை சோ்ந்தவர். இந்த மருத்துவர், பாதிரியாரால் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்களின் கருவை கலைக்க உடந்தையாக இருந்திருப்பார் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதற்கும் போலீஸ் விசாரணையில் முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சைபர் கிரம் காவல்துறையினர் பாதிரியாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியாரிடம் விசாரணை முடிந்து மீண்டும் அவர் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

arrested police kanniyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe