4 பேர் கொண்ட பாஜக குழு தமிழகம் வருகை

4-member BJP team visits Tamil Nadu

தமிழகத்தில் பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட குழு இன்று தமிழகம் வருகை தர உள்ளது.

தமிழகத்தில் பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருந்தார். அதன்படி இந்த குழுவில் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பாஜக குழு இன்று தமிழகம் வருகை தர உள்ளது.

இந்த குழு பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் 4 பேர் கொண்ட குழு நாளை ஆலோசனை நடத்துகின்றனர். அதன் அறிக்கையை விரைவில் தேசிய தலைமைக்கு சமர்ப்பிக்கஉள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Annamalai Chennai Meeting
இதையும் படியுங்கள்
Subscribe