Advertisment

அரசியல் பயணத்தில் 31-வது ஆண்டில் ம.தி.மு.க!

31 years of Mdmk

Advertisment

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

கடந்த 1994ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வைகோ தலைமையிலான கட்சியாக ஆரம்பிக்கப்பட்டு இன்று 31வது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடியிருக்கிறது.

இந்த விழாவானது இன்று (06-05-24) காலை கட்சியின் தலைமைக் கழகமான தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, லட்டு, பொங்கல், பழங்கள் போன்றவைகளைத்தொண்டர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இரத்ததானம் வழங்கி, இரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இணையதள அணியின் சார்பில் #Mdmk31 என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டிங் செய்யப்பட்டது.

anniversary vaiko mdmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe