Advertisment

2024 நாடாளுமன்றத் தேர்தல்; குழுக்களை அறிவித்த திமுக

2024 parliamentary elections; DMK has announced the groups

Advertisment

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை கொடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நாடாளுமன்றத்தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக எம்.பி கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

elections parliment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe