Skip to main content

2021 சட்டசபை தேர்தல் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கியது மஜக தலைமை செயற்குழு!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

dddd

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஹோட்டல் அஃப்னா ஹாலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமையில் நடைப்பெற்றது.

 

இதில் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு பாரூக், இராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாபிதீன், தைமிய்யா, மன்னை. செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது ஆகியோர் பங்கேற்றனர்.

 

மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அணீஸ், ஷமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், பாபு ஷாகின்ஷா, நெய்வேலி இப்ராகிம், துரை முகம்மது, அப்சர் செய்யது, காயல் சாகுல் மற்றும் அணிகளின் மாநில செயலாளர்கள்  கலந்து கொண்டனர்.  இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

1. தேர்தல் நிலைபாடு:

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எத்தகைய அரசியல் நிலைபாடுகள் எடுப்பது என்பது குறித்து இச்செயற்குழுவில் விரிவாக கருத்து கேட்கப்பட்டது. அறுதிப் பெரும்பான்மையானவர்களின் கருத்துப்படி, இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு இச்செயற்குழு வழங்குவதாக தீர்மானிக்கப்படுகிறது.

 

2. தேர்தல் மாதங்கள்:

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, வருகின்ற பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களை மஜகவின் தேர்தல் மாதங்களாக அறிவிப்பது என்றும், இதில் தேர்தல் நிதி வசூவிப்பது என்றும், தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுவது  என்றும் இச்செயற்குழு முடிவு செய்கிறது. 

 

3.வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக:

மத்திய அரசு இயற்றியுள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

4.விவசாயிகளுக்கு பாராட்டு:

டெல்லியில் கடும் குளிரில் தொடர்ச்சியாக போராடும் விவசாயிகளுக்கு இச்செயற்குழு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

5. சிறைவாசிகள் விடுதலை:

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்து வாழும் அல்லது 60 வயதை கடந்து வாழும் அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், பாரபட்சமின்றி மனிதாபிமானத்தோடு முன் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும், தமிழக கவர்னர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

dddd

 

6.மீனவர் படுகொலை:

இலங்கை கடற்படையால் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தமிழகத்தை  சேர்ந்த 4 மீனவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருப்பதை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கிறது. மத்திய அரசு இது விஷயமாக இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதை ஐக்கிய நாட்டு சபையில் முறையிட வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

 

7.பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக:

சமீபத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகமெங்கும் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால்  விவசாயிகள் பெரும் இழப்பை  சந்தித்திருக்கின்றனர். அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து முழு நிவாரணத்தை பெற்று தர வேண்டும் என்றும், தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தர வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டு கொள்கிறது.

 

8.கரோனா முன்னெச்சரிக்கை:

கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உயிர் துறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இச்செயற்குழு தனது இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொதுமக் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசு கூறும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிட வேண்டும் என்றும் இச்செயற்குழு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

 

9. ஹாஜிகளுக்கு வரிவிலக்கு:

முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மக்காவிற்கு செல்லக் கூடிய ஹாஜிகளுக்கு இதுவரை இருந்து வந்த சலுகைகள்  தொடர வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. ஹஜ் கமிட்டியின் மூலம்  செல்லக்கூடிய ஹாஜிகளுக்கு வரிவிலக்கு அளித்துள்ளதை போல தனியார் நிறுவனத்தின் மூலம் செல்லக்கூடிய ஹாஜிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

 

dddd

 

10.பறிபோகும் மாநில உரிமைகள்:

மத்தியில் மோடி அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருவதோடு அந்தந்த மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை பறித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.  மாநில அரசின் உரிமைகளை பறிப்பதை மத்திய அரசு நிறுத்தக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்க வேண்டும் என்றும்  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

11.கரோனா தடுப்பு மருந்துகள்:

உலகையே பெறும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலகமே மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இம்மருந்துகளை மிகவும் கவனமாக பயன்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என இச்செயற்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

 

12. குடியுரிமை போராட்ட வழக்குகள்:

குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டங்களை  எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்ற அமைதி வழி ஜனநாயக போராட்டத்தில் பங்கு பெற்ற போராளிகள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

13.பாசிசத்திற்கெதிராக அணி வகுப்போம்:

மத்தியில் மோடி அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து ஜனநாயக சக்திகளின் குரல்வளையை நெறித்து வருகிறது. மத்திய அரசிற்கு எதிராக பேசினாலே தேச விரோத வழக்குகள்  பதியப்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே இது போன்ற பாசிச வாதிகளின் போக்கை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

14.விண்ணை முட்டும் விலைவாசி:

நாங்கள் பதவியேற்றால் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மத்திய அரசு தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்றி வருவதை அனுமதிப்பதை வன்மையாக இச்செயற்குழு  கண்டிக்கத்தக்கது.

இதனால் கடந்த ஆறு மாத காலமாக கரோனாவால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை மேலும் வதைக்கும் விதமாக இதுபோன்ற விலையேற்றம் அமைந்துள்ளது. எனவே விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. மேற்கண்ட 14 தீர்மானங்களுடன் செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

“2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” - விஷால் கணிப்பு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vishal about 2024 and 2026 election, his political party, and vijay tvk entry

விஷால் புது அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து, “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரது இயக்கம் குறித்த கேள்விக்கு, “நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். உடனே நாங்கள் சரி செய்வோம். படப்பிடிப்பிற்கு போகும் போது, அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். அங்கு சின்ன சின்ன அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. அதனால் உதவிகளைப் பூர்த்தி செய்தால் மனசு சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதே என்னுடைய கட்சி பெயர் என்ன, அவருடன் கூட்டணியா, என்பதெல்லாம் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மக்கள் சேவை செய்ய இத்தனை கட்சி தேவையில்லை. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். அதற்கு இப்போது இருக்கிற கட்சிகளே அதிகம். அதைத் தாண்டி ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கையில் தான் வருகிறார்” என்றார்.

மேலும், “அரசியல் என்பது பொதுப்பணி மற்றும் சமூக சேவை. அது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்வது, அல்லது வரப்போறன்னு சொல்லிட்டு வராமல் இருப்பது...அப்படி எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், அதற்கான காலகட்டத்தில் முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக ஆவேன் என எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதே போல் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். அதனால் எல்லாமே அந்த காலம் எடுக்கக் கூடிய முடிவு தான்” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். இதற்கு முன்னாடி ஒரு முறை கேப்டன் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என சொல்லியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவு ஒன்னும் கிடையாது. சொன்னாலும் ஜெயிலில் பிடித்து போடமாட்டார்கள்” என்றார். 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு, “என்னுடைய கணிப்பின்படி 2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” என்றார்