Skip to main content

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ 1500 வழங்க வலியுறுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை

Published on 19/03/2019 | Edited on 19/03/2019
admk



2019 மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 
 

அதில், அம்மா வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்தப்படும். அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1500 நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்.


இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும. தமிழகத்தின் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  விடுதலை செய்ய வலியுறுத்தப்படும். 


தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு திட்டம் மூலம் உள்நாடு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தமிழகத்தன் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை அதிமுக அரசு வலியுறுத்தும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.