Advertisment

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்... 

Advertisment

செந்துறை வடக்கு ஒன்றியத்தில் மாற்றுகட்சியில் இருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

வஞ்சினபுரம், பெரும்பாண்டி, வங்காரம், நத்தகுழி, உகந்த நாயகன் குடிக்காடு, ஆகிய கிராமங்களை சார்ந்த 200 க்கு மேற்பட்டவர்கள் ஒருங்கிணைப்பாளர் வஞ்சினபுரம் க. தனபால், பழமலை மற்றும் சத்தியராஜ் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் கழக ஆடை அணிவித்து கழகத்தில் இணைத்தார்கள்.

மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் வி. எழில்மாறன், விபி. நடேசன், ஊராட்சி கழக செயலாளர்கள் ஜெயராமன், துரை. தேன்துளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன் வஞ்சினபுரம் கிளைக்கழக செயலாளர் ரவிச்சந்திரன், நல்லநாயகபுரம் கிளைக்கழக செயலாளர் பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

வஞ்சினபுரம் ஊராட்சி கழக செயலாளர் பெரும்பாண்டி அன்பழகன் நன்றி கூறினார். பெரும்பாண்டி ஊராட்சி உறுப்பினர் அ. ராஜா, வங்காரம் குமரவேல், உகந்த நாயகன் குடிக்காடு சுப்பிரமணியன் , நத்தக்குழி லெச்சுமணன், வஞ்சினபுரம் வெண்ணிலா, மலர் ,சித்ரா ஆகியோர் தலைமையில் இணைந்தனர்.

join ss sivasankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe