Advertisment

20 தொகுதியிலும் இடைத்தேர்தல் வரப்போகிறது; முத்தரசன் சாடல்

m

Advertisment

"திமுகவுடன் இணைந்து மக்கள் பிரச்சனைகளை சந்தித்து வரும் அணிகள் அரசியல் கூட்டணியாக மாறி நிச்சயம் வெற்றி பெறும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

திருவாரூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், "திருவாரூர், திருப்பரங் குன்றம் மற்றும் அல்லாமல் வழக்கில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடை தேர்தல்கள் வரபோகிறது. மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகள் வெற்றிபெறாமல் இருப்பதற்குறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திமுகவோடு மக்கள் பிரச்சனையில் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இந்த கூட்டணி அரசியல் அணியாக மாறும் அந்த அரசியல் அணி நிச்சயமாக வெற்றி பெறும்.

Advertisment

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு இது வரை தண்ணீர் கிடைக்க வில்லை. காரணம் தூர்வாரப்படாதது. தூர் வார ஒதுக்கீடு செய்யப் பட்ட நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. பொதுப்பணித் துறை முதலமைச்சர் கீழ் செயல்படுகிறது. அந்த துறை முற்றிலும் செயலிழந்துள்ளது. இதனால் தான் தண்ணீர் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்லிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் முக்கொம்பு கதவுணைகள் உடைந்தற்கும் காரணம் அதிகமாக மணல் அள்ளியது தான். எனவே காவிரியில் மணல் அள்ளுவதை தடுத்திட வேண்டும்.

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலை கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை செயல்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும், இல்லை எனில் காவல் துறையினர் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்த நேரிடும்" ‍ என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe