18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ள நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. நிலுவை தொகை இருந்தால் அதனை முழுவதும் செலுத்தவிட்டு, விடுதியில் இருந்து உடனடியாக 18 எம்.எல்.ஏக்களும் வெளியேற வேண்டும் என்று சபாநாயகர் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.