தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்டஎம்எல்ஏக்கள் தரப்பில் அவர்களது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நீதிமன்ற பதிவாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.