தேமுதிகவின் 17ஆம் ஆண்டு கட்சி துவக்க நாளை முன்னிட்டு இன்று (14.09.2021) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மேலும், கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, துணைச் செயலாளர்மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment