Advertisment

140 வேட்பளர்கள் பட்டியல் ரெடி... தேமுதிகவின் அடுத்த மூவ்!

140 Candidates List Ready ...dmdk  Next Move!

Advertisment

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று(09.03.2021) காலை 11மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுககொடுக்க இருக்கும் குறைந்த தொகுதிகளைஏற்பதா? அல்லதுதனித்து நிற்பதா?என மாவட்டச் செயலாளர்கள் உடனான இந்த அவசர ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகதேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது இன்று தெரியவரும் எனக் கூறப்பட்டநிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

அதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிடும் 140 வேட்பாளர்கள் பட்டியலை இன்று தேமுதிக தலைமை வெளியிட இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அமமுக உடன் திரைமறைவில் கூட்டணி பேச்சுவாரத்தை நடைபெற்றதாகவும்,மறுபுறம்தனித்து நிற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

dmdk premalatha vijayakanth tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe