Advertisment

ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோருகிறது கோவா காங்கிரஸ்!

கோவாவில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்து இருப்பதால், ஆட்சி அதிகாரத்தைக் கோருவதற்காக ஆளுநரைச் சந்திக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

Advertisment

goa

கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இதனை நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் ஆட்சியமைக்கும் அதிகாரம் குறித்து ஆளுநர்களிடம்கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக அறிவித்தன.

இந்நிலையில், கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் செல்லக்குமார் இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க அதிகாரம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் மிருதுளா சின்கா ஒருவார காலம் அவகாசம் தந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். தற்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மிருதுளா சின்காவை நேரில் சந்தித்து இதுகுறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

karnataka verdict karnataka election congress Goa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe