Advertisment

“அறிவிக்கப்பட்ட 12,000 திட்டங்கள் நிலுவையில் உள்ளது” - ஆர்.பி.உதயகுமார்

“These are the projects launched by the Chief Minister; 12,000 announced pending” – RP Udayakumar

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களைத்தான், முதல்வர் இன்று ரிப்பன் வெட்டி துவக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Advertisment

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் பேசியதாவது, “சட்டசபையில் மேதகு ஆளுநர் உரையில் அறிவித்த திட்டங்கள், மானியக்கோரிக்கையில்அறிவித்த திட்டங்கள், 110 விதியின் கீழ்அறிவித்த திட்டங்கள், நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள், வேளாண்மை பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்புகிற கேள்விக்கு பதிலளித்த திட்டங்கள், இப்படி எனக்குத் தெரிந்து ஏறத்தாழ 12000 அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலுவையில் உள்ளதைத்தான் நாம் காண்கிறோம்.

Advertisment

இதை விடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுக்கும் 10 கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்களின் அனுபவத்தை வைத்து முன்னுரிமை வழங்குவார்களா? மேலும், இதை செயல்படுத்த முதல்வர் முன்வருவாரா? இதற்கு காலவரையறைநிர்ணயிக்கப்படவில்லை.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்த மாதிரியான திட்டங்களை வகுத்துள்ளது. எப்படி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களைத்தான் முதல்வர் இன்று ரிப்பன் வெட்டி துவக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe