''11 கிலோ தங்கம்... 34 லட்ச ரூபாய் கிரிப்டோ கரன்சி...''-சிக்கும் வேலுமணி!

''11 kg of gold ... 34 lakh rupees crypto currency ...' '- Velummani trapped!

எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷின் வீடு, எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, கடை, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனையில் 11.53 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி மற்றும் கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்போன்கள், வங்கியின் லாக்கர் சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 லட்ச ரூபாய்க்குகிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்ட சோதனையில் அவர் கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்திருப்பது தெரியவந்திருந்த நிலையில் எஸ்.பி.வேலுமணியும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

admk raid thangamani velumani
இதையும் படியுங்கள்
Subscribe