Skip to main content

பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின் கதி என்ன? -பெ. மணியரசன்

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
Maniyarasan

 

தமிழ்தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிகளில் பயின்று, காலாண்டு, அரையாண்டுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கரோனா காரணமாக இறுதித்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ளது. இத்தேர்ச்சி முடிவுகள் 10.08.2020 அன்று வெளியிடப்பட்டது, அம்முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் சற்றொப்ப ஒரு இலட்சம் மாணவர்கள், தனித்தேர்வர்களாக, நேரடியாகத் தேர்வெழுத பதிவு செய்து, தங்களுக்குரிய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) வழங்கப்பட்டிருந்த நிலையில், கரோனா காரணமாக தேர்வுகளை அரசு நடத்தவில்லை. 

 

இந்த தனித்தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு, தேர்வு வைக்க போகிறதா அல்லது வேறு வகையில் தேர்ச்சி வழங்க போகிறதா என்ற விவரத்தை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இதுபற்றி எதுவும் தெரியவில்லை. 

 

11.08.2020 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை 24.08.2020 அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ஒரு இலட்சம் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி குழம்பிப்போய் உள்ளார்கள். 

 

அருள்கூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி இந்தத் தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் எதிர்காலம் தங்கள் முடிவில் அடங்கியிருக்கிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

10 ஆம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக் கொலை!

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Class 10 student issue in andhra

 

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே அமர்நாத் என்ற சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அர்ஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பர் உள்ளார். இந்த நிலையில் அர்ஜுன், அமர்நாத்தின் அக்காவிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனை அமர்நாத் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அமர்நாத் நேற்று டியூசன் முடித்துவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது சக நண்பர்கள் 4 பேருடன் வந்த அர்ஜுன், அமர்நாத்தின் மேல் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 

 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அமர்நாத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அமர்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அமர்நாத் இறப்பதற்கு முன்பு தனது மரண வாக்குமூலத்தில் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர்.