Advertisment

‘100 லட்சம் கோடி’ - சுப்ரியா ஸ்ரீநேத் பகீர் குற்றச்சாட்டு

'100 Lakh Crore' - Congress blames Modi government

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Advertisment

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மும்மடங்காக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் 14 பிரதமர்களின் 67 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கடன் 55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் அவரது 9 ஆண்டு கால ஆட்சியில் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisment

மோடி தலைமையிலான பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாளி ஆகியுள்ளார். இந்த கடனுக்கான ஆண்டுதோறும் மத்திய அரசு 11 லட்சம் கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார சீரழிவுக்கான பெருமை பிரதமர் மோடியையே சாரும். அதோடுமொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான கடனும் 84% உயர்ந்துள்ளது. இதற்கு மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். இதனாலேயே நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe