100 நாள் வேலை செய்யும் 13 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று!

100 day work - Corona infection for 13 workers - Chidambaram -

சிதம்பரம் அருகே ஒரே ஊரில் 100 நாள் வேலை செய்யும் 13 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். மீதி மூன்று பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.பின்னர் அந்த கிராமத்தில் கரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

100 days workers Chidambaram corona virus infection
இதையும் படியுங்கள்
Subscribe