10 AIADMK ministers defeated!

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். ஆவடியில் போட்டியிட்ட பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பென்ஜமின், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.சி.சம்பத்,சங்கரன்கோவிலில் போட்டியிட்ட ராஜலட்சுமி, ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட கே.சி.வீரமணி, ராசிபுரத்தில் போட்டியிட்ட சரோஜா, திருச்சி கிழக்கில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.