தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (தி.மு.க.வுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை.
கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி தி.மு.க.வும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் நாளை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் மற்றும் பாதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அவசர பயணமாக இன்று (16.02.2026) மதியம் டெல்லி செல்ல் உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் மூலம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் செல்வபெருந்தகையின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/selvaperunthagai-mic-2026-02-16-12-20-51.jpg)