இந்தி மொழி தினிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் என்பது வெறும் ஒலிகளின் தொகுப்பு அல்ல அது எங்களின் உயிர் மூச்சு. முன்னோர்களின் ரத்தம், அடையாளம், சுயமரியாதை இனம் தன் மொழியை இழப்பது முகவரியை தொலைப்பதற்கு சமம். அதனைக் காக்க தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி 12 பேர் பலியானார்கள். இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களை மொழிப்போர் தியாகிகள் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போது பல்கலைக்கழகத்தில் பயின்ற ராஜேந்திரன் என்ற மாணவன் காவல்துறையின் குண்டடிப்பட்டு மாய்ந்தார். இதனையொட்டி அவருக்கு பல்கலைக்கழக வாயிலில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மொழிபோர் தியாகிகள் தினத்தில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் தியாகிகள் தினத்தில் திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் செந்தில்குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மூத்த நகர மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், மனோகர் உள்ளிட்ட கட்சியினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/25/cd-au-raj-admk-2026-01-25-16-47-05.jpg)
அதிமுக சார்பில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பேரனியாக வந்து மாலை அணிவித்தனர். அதேபோல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ராகவேந்திரன் தலைமையில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, த.மு.எ.க.ச மாவட்ட தலைவர் பாரதிதமிழ்முல்லை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகி குமரவேல், நகர நிர்வாகிகள் சசிதரன், சதாசிவம் உள்ளிட்டவர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/25/cd-au-raj-tmys-2026-01-25-16-47-38.jpg)
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாமக, மக்கள் அதிகாரம், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் கலந்து கொண்டு ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து மாலையில் சிதம்பரம் நகரத்தில் திமுக மற்றும் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை போற்றும் வகையில் தனித்தனியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Follow Us