பாஜகவின் மூத்த நிர்வாகியும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 8 ஆம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் இருந்தபோது இல.கணேசன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், டி.டி.வி.தினகரன், காங்கிரசின் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் செம்மலை உள்ளிட்ட பலரும் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் திநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் நயினார் நாகேந்திரன்,ஹெச்.ராஜா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/15/a4880-2025-08-15-23-22-57.jpg)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/15/a4881-2025-08-15-23-23-25.jpg)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/15/a4883-2025-08-15-23-24-12.jpg)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/15/a4884-2025-08-15-23-24-34.jpg)