Political figures show off their grandeur in New Year greetings at election
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று புத்தகங்கள் தந்தும் சால்வைகள் அணிவித்தும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் எல்லாம் தங்களையும், கட்சி சின்னத்தையும் அச்சடிக்கப்பட்ட நாட்காட்டி, இனிப்பு, கழக வேட்டி அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/el2-2026-01-02-08-01-23.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், திமுகவைச் சேர்ந்த ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஞானவேலன், சமுதாய நல்லணிக்க சமபந்தி விருந்து என்கிற பெயரில் புத்தாண்டு நிகழ்ச்சியை தனது ஊரான மதனஞ்சேரியில் ஏற்பாடு செய்து இருந்தார். தனது ஒன்றியத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 15 ஆயிரம் பேரை தனது சொந்த ஊரில் கட்சிக்காக கட்டியுள்ள தளபதி அறிவாலயம் பெயரிலான அலுவலகத்துக்கு வரவைத்து அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு கறுப்பு சிவப்பு கரை வேட்டி அணிவித்து இனிப்பும், தினசரி நாட்காட்டி வழங்கியுள்ளார். தொண்டர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு அறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் உருவமைப்பு வேடம் அணிந்தவர்கள் வாழ்த்துச் சொல்ல நேரில் வந்துள்ளனர். அச்சு அசலாக அவர்களைப் போல் இருப்பதை பார்த்து தொண்டர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியாகி அவர்களுடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 300 வெள்ளாடு வெட்டப்பட்டு 2 ஆயிரம் கிலோ அரிசியில் 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கியுள்ளனர். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/el1-2026-01-02-08-01-35.jpg)
இதுப்போன்ற நிகழ்ச்சிகள் சிம்பளாக நடக்கும். இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஆளும்கட்சி பிரமுகர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், சீட் எதிர்பார்ப்பவர்கள் என பலரும் தங்களது தொகுதிகளில் இப்படிப்பட்ட பிரமாண்ட புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களையும் தங்கள் கட்சி தொண்டர்களையும் கவர்ந்து வருகின்றனர். இந்த வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு தை 1 மற்றும் பொங்கல் பண்டிகை வரை நடைபெறும் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.
Follow Us