சென்னையில் காவலர் ஒருவர் மது போதையில் பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டம் தெரு பகுதியில் பெண் ஒருவரின் வீட்டுக்குள் சீருடையில் மது போதையில் சூர்யா என்ற காவலர் புகுந்துள்ளார். அப்பெண்ணிடம் காவலர் சூர்யா பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சம்பந்தப்பட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த வீட்டுக்குள் காவலர் நுழைந்து கட்டிலில் அமர்ந்து சீருடையை கழட்டுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இதில் சம்பந்தப்பட்ட 32 வயது பெண் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக கைதாகி பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது காவலர் சூர்யா அவரது எண்ணை பெற்று அப்பெண்ணிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சூர்யா அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் லாவகமாக வீட்டுக்குள்ளே வைத்து காவலரை அப்பெண் பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது 'சீருடையில் இருப்பதால் அவரை விடுவதாகவும் இல்லை என்றால் பொதுமக்கள் சேர்ந்து அவரை தாக்கி இருப்போம்' என்று கூறும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த சூர்யா மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/4-2026-03-06-19-56-53.jpg)