Police write letter to insta Photograph: (social media)
சில சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ரீல்ஸ் வீடியோக்கள் வரைமுறைப்படுத்தாதது சமூக குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்புகளில் இருந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகள் குறிப்பாக ரீல்ஸ்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
முகநூல் எனும் சமூக வலைத்தள பக்கங்களில் ஏஐ தொழில்நுட்ப முறையில் தானாகவே இதுபோன்ற வன்முறை பதிவுகள் முறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றத்தைத் தூண்டும் வகையிலான பதிவுகள் குறிப்பாக ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு வெளியாகும் ரீல்ஸ்கள் வன்முறை செயல்பாடுகளுக்கு வழிவகுப்பதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே காவல்துறை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வரைமுறைபடுத்தாமல் இருக்கக்கூடிய சமூக வலைத்தள பக்கங்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்குமார் கடிதம் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குற்றங்கள் நடைபெறுவதற்கு ரீல்ஸ் ஒரு காரணியாக இருப்பதால் இன்ஸ்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுத முடிவு எடுத்திருப்பதாக சென்னை ஆணையர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.