ஈரோட்டில் பவானி ஆற்றின் கிளைக் கால்வாய் பகுதியை ஒட்டிய இடத்தில் சாக்குப் பைகளில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் ஆட்டையாம்பாளையம் பகுதியில் கீழ்பவானி கிளைக் கால்வாய் ஓடி வருகிறது. இந்த கால்வாய்க்கு அருகிலேயே பிளாஸ்டிக்கால் ஆன பெரிய அளவிலான சாக்குப் பைகள் கிடந்தது. அதில் மர்மப் பொருள் ,இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்நிலைய போலீசார் சாக்குப் பைகளை சோதனை செய்தனர். அதில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்துகிடந்தது யார்? கொலை செய்து வீசியது யார் என்ற அடிப்படையில் இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/17/a4905-2025-08-17-17-53-21.jpg)