திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிலர் அத்துமீறி நுழைந்து ஆசிரியைகளை பணி செய்யவிடாமல் தடுத்து மாணவிகள் போராட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியைய்ம் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எம். இடையபட்டி முதல் தெத்தூர் வரையுள்ள ஆலம்பட்டி, வடகபட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் சாலைகளில் ரோடு போடும் பணிகள் நடைபெறுகிறது. இதில் தாமதம் ஏற்படுவதால் பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை என கூறி கடந்த 27.01.2026 அன்று எம். இடையபட்டி பிரிவு ரோடு அருகில் திருச்சி நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ரகுராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த, சம்பவம் தொடர்பாக 28.01.2026 அன்று வைரவளவன் (எஸ்.எப்.ஐ. திருச்சி புறநகர் மாவட்ட தலைவர்) மற்றும் தியாகராஜன் ஆகியோர் துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சிறப்பு வகுப்பு நடத்திகொண்டிருந்த ஆசிரியைகளை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். அதோடு தெத்தூர் பகுதியில் சாலை பழுதாகி உள்ளதாகவும். அதற்காக பள்ளி மாணவிகளை அழைத்து சென்று போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அதற்காக மாணவிகளை அனுப்பி வைக்குமாறும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி மாணவிகளை பள்ளியிலிருந்து அழைத்து சென்று துவரங்குறிச்சி பஸ் டிப்போ வாசலில் வைரவளவன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் பள்ளி மாணவிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/inves-2026-02-02-08-23-29.jpg)
அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து, துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியைகளை பணி செய்யவிடாமல் தடுத்து பள்ளி மாணவிகளை போராட்டத்திற்கு அழைத்து சென்ற வைரவளவன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் மீது துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/tn-police-inves-2026-02-02-08-22-59.jpg)