உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அசோக் கேசர்வான். இவருக்கு 13 வயதில் ஆயுஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஆயுஷ் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுவனை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு, சிறுவனின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

புகார் அளித்த தகவலை அறிந்த கடத்தல்காரர்கள், காவல்துறையினரிடம் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அந்த சிறுவனை கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்து சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றவாளிகளைக் கைது செய்யத் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது.

Advertisment

இந்த தேடுதல் வேட்டையில், நேற்று காலை பர்கர் பகுதியில் பதுங்கிருந்த கடத்தல்காரர்களை காவல்துறை சுற்றிவளைத்து. அப்போது காவல்துறை மீது கடத்தல்காரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். காவல்துறையினரும் கடத்தல்காரர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 70 வயதான கல்லு என்கிற சாவே இமான் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான இர்பான் அன்சாரி காலில் குண்டடிபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறுவனின் குடும்பத்தாருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.