திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, கனகம்மா சத்திரம், போன்ற ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் போதைப் பொருள் நடமாட்டம் சாராயம் கடத்தல் கஞ்சா கடத்தல் போன்றவை தடுப்பதற்காக திருத்தணியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது
தமிழக காவல்துறை சார்பில் மது ஒழிப்பு, போதைப்பொருட்கள் ஒழிப்பு போன்றவை தீவிரமாக வாகன தணிக்கை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட ஆந்திர மாநிலம் மற்றும் வட மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்ய இந்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக காவலர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ச்சியாக காவல் நிலையம் மூடப்பட்டு வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு பூட்டு போட்டு ஓய்வெடுப்பதற்கு போலீசார் சென்றுள்ளனர். இதனால் இந்த காவல்நிலையில் சிசிடிவி காட்சிகளும் கேமராக்கள் இல்லாததால் காவல் நிலையத்தில் உள்ள வழக்கில் தொடர்புடைய சொகுசு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வியும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்
புகார் கொடுப்பதற்கோ அல்லது பாதுகாப்பு வேண்டிய பொதுமக்கள் வந்தால் பூட்டி கிடக்கும் காவல் நிலையம் போலீசாரே இல்லாத காவல் நிலையம் எதற்கு என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்படி காவல் நிலையம் பூட்டப்பட்டு போலீசார் இல்லாத நிலை தொடர்வதால் கஞ்சா மற்றும் மது போன்றவை கள்ளத்தனமாக இந்த பகுதியில் விற்பனை அதிகரித்துள்ளதால் குற்ற சம்பவங்கள், கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இளம் சிறார்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் தொடர்ச்சியாக இந்த திருத்தணி பகுதியில் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இதனை தடுப்பதற்கு போதிய போலீசார் மற்றும் வாகன தணிக்கை செய்யக்கூடிய அளவிற்கு போலீசார் ஈடுபட வேண்டும். தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும். இதனை செய்ய முடியாமல் போலீசார் இல்லாமல் திணறிக் கொண்டு காவல் நிலையத்தை பூட்டு போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர் என பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள்.
Follow Us