புதுக்கோட்டையில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அட்டைப் பெட்டிகளில் போதை மாத்திரைகளுடன் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் பேசும் போது, “4.82 லட்சம் மாத்திரைகளுடன் 4 பேரை புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த மாத்திரைகளில் தயாரிப்பு நிறுவனப் பெயரோ, சீலோ இல்லை. இவை எங்கிருந்தோ தயாரித்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/21/pil-2026-02-21-23-26-28.jpg)
இந்த மாத்திரைகள் என்ன வகையானது என்பதை அறிய சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளோம். மேலும், எங்கே தயாரிக்கப்பட்டு எப்படி புதுக்கோட்டை வந்தது. இதில் வேறு யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கடத்தலை பிடித்த அனைவரையும் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/21/pills-2026-02-21-23-26-18.jpg)