Police snatched away a gift given by wife at Rose Day
பீகார் மாநிலம், முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் குமாரி. இவரை சமூக வலைத்தள பக்கத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் பதிவிடும் வீடியோக்கள் பொதுவெளியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இவர் சில தினங்களுக்கு முன்பு அழகு நிலையம் ஒன்றில் அமர்ந்து கொண்டு, போஜ்புரி பாடலுக்குக் கையில் துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, உரிமம் பெற்ற துப்பாக்கியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக, இவர் மீது புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், கடந்த 7 தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரோஸ்டே வை கொண்டாடும் வகையில், காஞ்சன் குமாரி தனது கணவர் ராகுல் குமாருக்கு ரோஸை அன்பளிப்பாக வழங்கினார். அத்துடன், மது பாட்டிலையும், மதுக் கோப்பைகளையும் வழங்கினார். அவர் இந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் பீகாரில் மது விலக்கு அமலிலிருந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு பெண் தனது கணவருக்கு மதுபாட்டில் வழங்கியது, பெரும் பிரச்சனையாக மாறியது. இது குறித்து விசாரணை நடத்திய எஸ்பி சையத் இம்ரான் மசூத், சட்டத்தை மீறிய காஞ்சன் குமாரி, அவரது கணவர் ராகுல் குமார் மற்றும் துப்பாக்கி உரிமையாளர் விஷால் குமார் ஆகியோர் மீது காசிம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, காஞ்சன் குமாரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us